தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி: கருக்கலைப்பின் போது பெண் உயிரிழப்பு - 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது...!

திருக்கோவிலூர் அருகே கருக்கலைப்பின் போது பெண் உயிரிழந்த சம்பவத்தில் 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் செல்வி மீண்டும் கர்ப்பம் அடைந்து உள்ளார். 5 மாத கர்ப்பமாக இருந்த செல்வி தனது கரப்பத்தை கலைத்துவிட முடிவு செய்து தனியார் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற்று உள்ளார். அங்க சிகிச்சை தொகை அதிகமாக கேட்தாக தெரிகின்றது.

இதனால் செல்வி அப்பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வரும் மணிகண்டன் மனைவி முத்துக்குமாரி (40) என்பவரிடம் கருகலைப்பு செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது மெடிக்கல் வைத்து நடத்திவரும் முத்துக்குமாரி தனது வீட்டு மாடியில் வைத்து ஆ.பாண்டலம் பகுதியை சேர்ந்த நர்ஸ் கவிதா (38) என்வரின் உதவியோடு செல்விக்கு கருகலைப்பு செய்திருக்கின்றனர்.

இதில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் செல்விக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இருவரும் முயன்று உள்ளனர். அப்போது செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செல்வியின் தாய் கொடுத்த புகாரின் போரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது செல்விக்கு கருக்கலைப்பு செய்த மெடிக்கல் உரிமையாளர் முத்துக்குமாரி மற்றும் நர்ஸ் கவிதா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் படி கருக்கலைப்பின் போது பெண் உயிரிழந்த வழக்கில் 2 பெண்களையும் குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்