தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் சாவு

தூத்துக்குடியில் கிரைண்டரின் மாவு அரைக்கும் போது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்து போனார்.

தினத்தந்தி

தூத்துக்குடியில் கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் இறந்தார்.

மாவு அரைத்த பெண்

தூத்துக்குடி அண்ணாநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 47). இவர் நேற்று காலையில் வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருந்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக கிரைண்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

சாவு

இதனை அறியாமல் வள்ளியம்மாள் கையை வைத்து உள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை