தமிழக செய்திகள்

குளத்தில் மூழ்கி பெண் பலி

களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி பெண் பலி

களியக்காவிளை, 

களியக்காவிளை அருகே உள்ள போற்றிவிளையை சேர்ந்தவர் சிந்து (வயது40). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 பிள்ளைகளும் கரளாவில் உள்ளனர். சிந்து தனது தாயார் வீட்டில் தங்கி இருந்தார். இவர் நேற்று மாலையில் வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், உறவினர்கள் அவரை தேடி குளத்திற்கு சென்றனர். அப்போது, சிந்து குளத்தில் பிணமாக கிடந்தார். அவர் குளிக்க இறங்கியபோது தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து களியக்காவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்