தமிழக செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருவெண்ணெய்நல்லூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலன். இவருடைய மனைவி நிர்மலா (வயது 40). இவர் நேற்று மாலை அதேஊரில் உள்ள வயல் வெளி பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனக்கு சொந்தமான மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மாடுகளை ஓட்டிச் சென்ற நிர்மலாவை மின்னல் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மின்னல் தாக்கி உயிரிழந்த நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்