கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொம்மம்பட்டடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 42). இன்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்தது.
இதனால் இவர் வீட்டின் வெளியே காயவைத்திருந்த துணிகளை எடுக்க சென்றுள்ளார். அப்பொழுது அவரது வீட்டின் அருகே உள்ள கலை என்பவரின் வீட்டின் மேற்கூரையில் மழைக்கு ஒழுகாமல் இருக்க ஒரு இரும்பு தகர சீட்டு வைத்திருந்தனர்.
அப்போது வீசிய பலமான சூறாவளி காற்றில் சீட்டின் மீது வைக்கப்பட்டிருந்த ஹாலோ பிளாக் கல் நகர்ந்து விட்ட நிலையில் அதில் இருந்த தகரம் காற்றில் பறந்து வந்து துணியை எடுக்க வந்த பச்சையம்மாளின் தலையின் மீது விழுந்தது.
அதனால் அவர் தலையில் சுக்குநூறாக வெட்டியதில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அந்த கிராம பகுதியில் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மேலும் சம்பவம் குறித்து விரைந்து வந்த சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வராஜ் நேரில் சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த பின் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.