தமிழக செய்திகள்

பாபநாசம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு - சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியதால் விபரீதம்

பாபநாசம் அருகே செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது, செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வசித்து வந்தவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வந்தார். கோகிலா கபிஸ்தலத்தில் வாட்ச் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று அவர் கடையில், செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதையடுத்து கடை முழுவதும் தீப்பற்றி எறிந்தது. பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கபிஸ்தலம் போலீசார், கோகிலாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போன் வெடித்து சிதறியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை