தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

தினத்தந்தி

தூத்துக்குடி 2-ம் கேட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்று மாலையில் இதன் அருகே உள்ள ரயில்வே பாதையை கடந்து வந்த பெண் மீது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் தலை நசுங்கிய அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், வடபாகம் போலீசார் விரைந்து சென்று, இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை கைது செய்தனர். இறந்த பெண் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை