தமிழக செய்திகள்

உடுமலை அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலி

உடுமலை அருகே மின்வேலியில் சிக்கி பெண் பலியானார்.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மானுப்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் லட்சுமி(வயது 55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி மாலை ஒன்பதாறு சோதனைச்சாவடி அருகே வேப்பங்கொட்டைகளை சேகரிக்க சென்றதாக தெரிகிறது. அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து லட்சுமியை தேடி அவருடைய உறவினர்கள் சென்றனர்.

அப்போது அங்குள்ள தனியார் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் லட்சுமி சிக்கி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அமராவதி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்த பயிர்களை பாதுகாக்க வைத்திருந்த சூரியசக்தி மின்வேலியில் சிக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு