தமிழக செய்திகள்

2 குழந்தைகளுடன் பெண் மாயம்

வேறு ஒருவருடன் பேசியதை கண்டித்ததால் 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.

தினத்தந்தி

ஜோலார்பேட்டை அருகே உள்ள பழைய ஜோலார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 31), பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாமிலா (26). இவர்களுக்கு தியாஸ்ரீ (5), ஜெயசுகன் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஷாமிலா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயா வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று கார்த்திக் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பியபோது மனைவி வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததை கண்டித்துள்ளார். அதன் பிறகு நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கார்த்திக் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு