தமிழக செய்திகள்

பெண்ணுக்கு கத்திக்குத்து

கொள்ளிடம் அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன்,தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன்,தம்பியை போ லீசார் கைது செய்தனர்.

நிலப்பிரச்சினை

கொ ள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் பரமானந்தம் (வயது48). இவரின் தம்பி பெர்னாட்ஷா (38). இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலை யில் நே ற்று அண்ணன், தம்பிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொ டர்ந்து பெர்னாட்ஷாவின் மனைவி மைதிலி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது பரமானந்தத்தின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் தமிழ்நிலவன் (20) மற்றும் அவரது தம்பி ஆகியோர் சென்று மைதிலியை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

கத்திக்குத்து

பின்னர் தமிழ்நிலவன் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மைதிலியின் கை ,முதுகு, வயிறு ஆகிய இடங்களில் குத்தினார். இதில் காயம் அடை ந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மைதிலி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் 0கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ் நிலவன் மற்றும் அவரின் தம்பி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்