தமிழக செய்திகள்

தீக்குளித்து பெண் தற்கொலை

மயிலாடுதுறையில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை, மே. 31-

மயிலாடுதுறை கூறைநாடு ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மல்லிகா (வயது 65). இவரது மகள் கனகா அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு குழந்தையுடன் வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மல்லிகா தான் குடியிருக்கும் வீட்டின் மாடியில், கடந்த 14-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மல்லிகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...