தமிழக செய்திகள்

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி பெண்கள் போராட்டம்

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி பெண்கள் போராட்டம்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் கழுக்கானிமுட்டத்தை சேர்ந்தவர் தவமணி. இவருடைய மகள் சுபத்ரா. தாய்-மகள் இருவரும் வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக சாராய விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சாராயம் விற்றதாக தவமணி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது மகள் சுபத்ரா, சாராய விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வேப்பங்குளம் பகுதி பெண்கள் நேற்று சாராய விற்பனை நடந்த இடத்திற்கு சென்று அங்கு விற்பனை செய்யப்பட்டு வந்த புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை எடுத்து சாலையில் வீசி எறிந்தனர்.

பின்னர் சாராய விற்பனையை கட்டுப்படுத்தாத போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு