தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

திருவொற்றியூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள 7-வது வார்டு, ராதாகிருஷ்ணன், சார்லஸ் நகர், ஒத்தவாடை, காந்தி நகர், ராமசாமி நகர், சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குழாய் இல்லாத தெருக்களில் மேல்நிலைத் தொட்டியில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் பிடித்து சென்று வினியோகிக்கப்படுகின்றன. இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், 3 நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர இல்லாததால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், காலி குடங்களுடன் வீதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிநீர் வாரிய அதிகாரிகளை வரவழைத்து மக்களிடம் விளக்கம் அளிக்க செய்தார். அதிகாரிகள், பொதுமக்களிடம் குடிநீர் வினியோகம் கழிவுநீர் கலப்பு போன்ற பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு