தமிழக செய்திகள்

மகளிர் தினவிழா

ஏரலில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

ஏரல்:

ஏரல் எஸ்.எம் இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்கில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் தலைமை தாங்கி வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கியும், பெண் ஊழியர்களுக்கு இலவச சேலை வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர். ஏரல் எஸ்.எம். பீயூல்ஸ் இந்துஸ்தான் பெட்ரோலிய டீலர் பிரவீனா சுரேஷ் காந்தி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். உதவி பொது மேலாளர் சுரேஷ்காந்தி வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் ஏரல் தொடக்க கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணிவண்ணன், பெட்ரோல் பங்க் மேலாளர் பெரும்படையான், மேற்பார்வையாளர் மகேஷ் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...