திருப்புவனம்
திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தலைமை மகப்பேறு மருத்துவர் ஸ்ரீவித்யா தலைமையில் நடைபெற்றது. விழாவில் மயக்கவியல் டாக்டர் கண்மணி, சிவகங்கை மாவட்ட குருதி கொடையாளர் ஒருங்கிணைப்பாளரான நந்தினி செல்வராஜ், மற்றும் நர்சுகள் உள்பட பலர் கலந்து கொண்டு மகளிர் தினம் குறித்து பேசினார்கள். முடிவில் சிறந்த குருதி கொடையாளர் விருது நந்தினி செல்வராசுக்கு, டாக்டர் ஸ்ரீவித்யா வழங்கினார். பின்பு பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.