நன்னிலம்:-
நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி, துணைத்தலைவர் ஆசைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர், 16 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார். அப்போது பேசிய அவர், 'பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட இடைத்தரகர்கள் யாரேனும் பணம் கேட்டால் உடனடியாக எங்களிடம் புகார் அளிக்க வேண்டும்' என்றார்.