தமிழக செய்திகள்

குடி பழக்கத்தை நிறுத்த சொன்னதால் தொழிலாளி தற்கொலை...!

குடி பழக்கத்தை நிறுத்த சொல்லி மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தினத்தந்தி

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள எடையூரை சேர்ந்த தொழிலாளி செல்லியப்பன் (வயது.46). இவரது மனைவி கன்னியம்மாள்.

மது பழக்கத்திற்கு ஆளான செல்லியப்பன், குடித்து விட்டுவந்து மனைவி கன்னியம்மாளிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார்

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரடம் அடைந்த மனைவி கன்னியம்மாள் குடி பழக்கத்தை நிறுத்த கோரி கணவன் செல்லியப்பனை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.

இதனால் மனமுடைந்த செல்லியப்பன், வீட்டில் தனியா இருந்த போது மின்விசிரியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செல்லியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து