தமிழக செய்திகள்

கருங்கல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கருங்கல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள மாதாபுரம் சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). இவர் வலை கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கலாசெல்வி கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்