தமிழக செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

பூதப்பாண்டி அருகே மனைவி கோபித்து பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே மனைவி கோபித்து பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர் ஏலப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 35). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மதுபோதையில் மனைவியிடம் அடிக்கடி அவர் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 17-ந் தேதி மீண்டும் ஜெபராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவருடைய மனைவி கோபித்து விட்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த ஜெபராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்த நிலையில் அழகியபாண்டியபுரம் பகுதியில் உயிருக்கு போராடினார். உடனே அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்