தமிழக செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

களியக்காவிளை:

களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மீனச்சல் எருத்தாவூர் பாறான்விளை பகுதியை சேர்ந்தவர் வின்ஸ் (வயது 50), தொழிலாளி. இவருடைய மனைவி கிரிஸ்டல் பிறீடா. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. வின்சுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோபித்து கொண்டு அவருடைய மனைவி தனது மகனை அழைத்துக்கொண்டு கீழாரூரில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்றார். இதன் காரணமாக வின்ஸ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில், சம்பவத்தன்று வின்ஸ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி கிரிஸ்டல் பிறீடா களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி