தமிழக செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

சோளிங்கர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவரது மணைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் இருந்த யுவராஜ் விஷத்தை குடித்து விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சோளிங்கர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் யுவராஜ் ஏற்கனேவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தகவலறிந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...