தமிழக செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தோவாளையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

நாகர்கோவில்:

தோவாளையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தோவாளை வடக்கூரை சேர்ந்தவர் பழனி (வயது 47), பூ கட்டும் தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவர்- மனைவி இருவரும் பிரிந்துவிட்டனர். மனைவியும், மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனி வீட்டில் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, மகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் பழனி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது