தமிழக செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி

குளச்சல்:

குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் தேவி தெருவை சேர்ந்தவர் முருகன், தச்சுத்தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் ஜெகன் (வயது 38), டிப்ளமோ படித்த இவர் கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவருடைய தாயார் மகளை பார்ப்பதற்காக கடந்த வாரம் சென்னைக்கு சென்றார்.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்னையில் வேலை பார்த்து வந்த ஜெகன் ஊருக்கு திரும்பினார். பின்னர், ஊரில் கூலிவேலைக்கு சென்று வந்தார். வீட்டில் தந்தை முருகன் மற்றும் ஜெகன் ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர். வீட்டுச்சாவியை ஜெகன் வைத்திருந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த முருகன் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால், அவர் பாலப்பள்ளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று முருகன் வீட்டிற்கு சென்றபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த முருகன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பின்பக்க கதவை உடைத்து உள்ளே பார்த்தார். அப்போது ஜெகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முருகன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு