தமிழக செய்திகள்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

அருமனை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

அருமனை:

அருமனை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி-கேரளா எல்லை பகுதியான புலியூர்சாலை பகுதியை சோந்தவர் சந்திரகுமார் (வயது 48), கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். சந்திரகுமாருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்தநிலையில், நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த சந்திரகுமார் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு காண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது