தமிழக செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

வலங்கைமானை அடுத்த வடக்கு பட்டம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் தேவேந்திரன்(வயது34). விவசாயி கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேனி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த தேவேந்திரன் நேற்று முன்தினம் மதுவில் பூச்சிமருந்தை கலந்துகுடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி