தமிழக செய்திகள்

கடம்பத்தூர் அருகே தொழிலாளி தற்கொலை

கடம்பத்தூர் அருகே தீராத வயிற்று வலியால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள தண்டலம் வேல் நகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருக்கு சுகந்தி என்கின்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் கடந்த ஒரு வருட காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல் நலம் தேறவில்லை. நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி அதிகமாகி வலியால் துடித்தார். இதனால் மனவேதனடைந்த அவர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தன்னுடைய அறைக்கு சென்று அங்கு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சுகந்தி கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?