தமிழக செய்திகள்

பெண்ணாடம் அருகேவாகனம் மோதி தொழிலாளி சாவு

பெண்ணாடம் அருகே வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தா.

பெண்ணாடம், 

விருத்தாசலம் அருகே உள்ள மணலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சக்திவேல் (வயது 38). இவர் டைல்ஸ் ஒட்டும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் திட்டக்குடியில் டைல்ஸ் ஒட்டும் வேலையை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு பின்னர், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சக்திவேலின் மனைவி முத்துலட்சுமி (38) பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்