தமிழக செய்திகள்

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறிய போது தவறி விழுந்த தொழிலாளி சாவு

மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறிய போது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள குன்னத்தூர் கொடித்தறவிளையை சேர்ந்தவர் நடேசன் (வயது67), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் வெட்டுமணிக்கு வந்தார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரிடம் லிப்ட் கேட்டார்.

அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நடேசனிடம் பின்னால் ஏறுமாறு கூறினார். தொடர்ந்து நடேசன் மோட்டார் சைக்கிளில் ஏற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடேசன் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை