தமிழக செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி படுகாயம்

தேனி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

தேனி அருகே அன்னஞ்சியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர், மோட்டார் சைக்கிளில் தேனி நேரு சிலை சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த மாணிக்கத்தின் காலில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், லாரி டிரைவரான மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த மணிக்கண்ணன் (42) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை