தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் கருத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 61), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மின்விசிறியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அசோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...