தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சேந்தமங்கலம் அருகே பாக்கு அறுவடை செய்யும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சேந்தமங்கலம்

தொழிலாளி

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தென்னங்குடி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). இவர் பாக்கு அறுவடை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அமுல் (34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சுரேஷ்குமார் சேந்தமங்கலம் அருகே உள்ள பாண்டி ஆறு கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் தோட்டத்தில் பாக்கு அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமார் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் மயக்க நிலையில் கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடன் வேலை பார்த்த தொழிலாளர்கள் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

உயிரிழந்தார்

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் குறித்து இறந்து போன சுரேஷ்குமாரின் மனைவி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

பாக்கு அறுவடை செய்யும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்