தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கட்டிட கூலி தொழிலாளி.

இவர் இன்று காலை திருவண்ணாமலை அண்ணா நகர் 9-வது தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வீட்டின் முதல் தளத்தின் அருகில் மின்சார வயர் சென்றுள்ளது. வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணிகண்டன் எதிர்பாராத விதமாக அந்த மின் கம்பியின் மீது உரசியதாக தெரிகிறது.

இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...