தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சீர்காழியில் பேக்கரி வாசலில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி போலீசார் விசாரணை

தினத்தந்தி

சீர்காழி:

சீர்காழி தாலுகா திருக்கருகாவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது45). இவர் சீர்காழி பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள தனியார் பேக்கரி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சங்கர் பணி முடிந்து கடையின் ஷட்டர் கதவில் கை வைத்தவாறு நின்று கொண்டிருந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் ஒரே இடத்தில் அசையாமல் நிற்பதை கண்ட வணிகர்கள் அவரை கூப்பிட்ட போது அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வணிகர்கள், அவரது அருகில் சென்ற பார்த்த போது சங்கரை மின்சாரம் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சங்கருக்கு ஷகிலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்