தமிழக செய்திகள்

மரம் விழுந்து தொழிலாளி பலி

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியில் மரம் விழுந்து தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி, 26-வது தெருவைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா (வயது 54). இவர், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனியார் பட்டறையில் வேலை செய்து வந்தார். கடந்த 28-ந் தேதி இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே உள்ள கார்த்திகேயன் சாலையில் சென்றபோது சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து இவர் மேல் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சாதிக்பாஷா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சாதிக் பாஷா பரிதாபமாக உயிரிழந்தார். பலியான சாதிக் பாஷாவுக்கு மெகதபின் (45) என்ற மனைவியும், பட்டபடிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வரும் முகமது தானேஷ் (22) என்ற மகனும், 9-ம் வகுப்பு படிக்கும் ஜூவேதிகா (15) என்ற மகளும் உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து