தமிழக செய்திகள்

தொழிலாளி மர்மசாவு

குஜிலியம்பாறை-கரிக்காலி சாலையில் வாரச்சந்தைக்கு எதிரே உள்ள வரட்டாறு பாலத்தின் கீழ் மர்மமான முறையில் தொழிலாளி இறந்து கிடந்தார்.

குஜிலியம்பாறை-கரிக்காலி சாலையில் வாரச்சந்தைக்கு எதிரே உள்ள வரட்டாறு பாலத்தின் கீழ் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக குஜிலியம்பாறை போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி, குஜிலியம்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலாயுதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்மமான முறையில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது பையில் வைத்திருந்த அடையாள அட்டையை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர், குஜிலியம்பாறை அருகே உள்ள நல்லாக்கவுண்டன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மனோகரன் (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோகரனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை