தமிழக செய்திகள்

கிணற்றில் தொழிலாளி பிணம்-போலீசார் விசாரணை

தூசி அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

தூசி அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள வாகை நத்த கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிதரன் (வயது 50). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வாக்கிங் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின் இவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தாண்டவராயன் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் முரளிதரன் இறந்து கிடப்பதாக தெரியவந்தது. தகவல் அறிந்த தூசி போலீசார் அங்கு சென்று முரளிதரன் உடலை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

இது குறித்து முரளிதரன் மனைவி சித்ரா புகார் கொடுத்தார். அதன்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவருக்கு தர்ஷினி, நித்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு