தமிழக செய்திகள்

மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு நீட்டிப்பு வழங்கி அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2012-13-ம் கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக நிலை உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

அந்த பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய 9 பாடங்களுக்கு 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 900 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அந்த பணியிடங்களுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு நீட்டிப்பு 31-12-2019 உடன் முடிந்தது. இதையடுத்து அந்த பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி, 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 1-1-2020 முதல் 31-12-2022 வரை 3 ஆண்டுகளுக்கு அல்லது தற்காலிக பணி இடங்களுக்கான தொடர் நீட்டிப்பு குறித்த நிதித்துறையின் மறுஆய்வில் முடிவு எடுக்கும் வரை இதில் எது முந்தையதோ அதுவரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு