தமிழக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலி: கத்தாருக்கு 2½ கோடி முட்டை ஏற்றுமதி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலி: கத்தாருக்கு 2½ கோடி முட்டை ஏற்றுமதி.

தினத்தந்தி

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் இருந்து குவைத், ஈரான், கத்தார், மாலத்தீவு, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. கத்தாரில் நடந்துவரும் உலகக்கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

முன்னதாக கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக அது 1 கோடி முட்டைகளாக கடந்த மாதம் உயர்ந்தது.

தற்போது மேலும் சுமார் 1 கோடி முட்டைகள் கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை மொத்தமாக சுமார் 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், வருகிற ஜனவரி மாதத்திற்குள் மேலும் 2 கோடி முட்டைகள் வரை கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாகவும் ஏற்றுமதியாளர் டாக்டர் பி.வி.செந்தில் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது