தமிழக செய்திகள்

உலக பாரம்பரிய வாரம்: மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் கட்டணமின்றி பார்வையிடலாம்...!

உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை நாளை முதல் கட்டணமின்றி பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மதுரை, திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை (சனிக்கிழமை) முதல் நவ.25-ம் தேதி வரை கட்டணமில்லாமல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கி தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தோ-சாரணிக் பாணியில் கட்டப்பட்ட அரண்மனையானது, பிரமாண்ட தூண்களுக்கு பெயர்பெற்றது. இந்த அரண்மனையில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. இதன் தூண்களின் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடியாகும். 

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை