தமிழக செய்திகள்

உலக பழங்குடியினர் தின விழா

விழுப்புரத்தில் உலக பழங்குடியினர் தின விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட நுழைவுவாயில் அருகில் உலக பழங்குடியினர் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பழங்குடியின செயல்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி கலந்துகொண்டு பழங்குடியின மக்கள் தலைவர் "பிர்சா முண்டா"வின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, பழங்குடியின மாணவர்கள் நன்கு கல்வியில் படித்து முன்னேற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இவ்விழாவில் பழங்குடி காட்டு நாயக்கன் சங்க மாவட்ட தலைவர் குப்புசாமி, பழங்குடி விடுதலை இயக்க பொருப்பாளர் திருக்கோவிலூர் முத்து, வக்கீல் தமிழ்மாறன், பழங்குடியின சங்க நிர்வாகிகள் குப்புசாமி, அய்யனார், ராஜேஷ் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு