தமிழக செய்திகள்

உலக மக்கள் தொகை தினம்

சிவகிரி பள்ளியில் உலக மக்கள் தொகை தின நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

சிவகிரி:

சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் நடந்தது. இதையொட்டி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு சிவகிரி நகரப்பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, பள்ளியின் செயலர் தங்கேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்றார்.

பேச்சு போட்டியில் ராயகிரி சி.பா.ஆதித்தனார் பள்ளி மாணவி அபிரஞ்சனி முதல் இடத்தையும், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா 2-வது இடத்தையும், சி.பா.ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி 3-வது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜாராம், செவிலியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நன்றி கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை