நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் ஜான் பிரிட்டோ, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் வெள்ளச்சாமி, நெல்லை மாநகர நல அலுவலர் (பொறுப்பு) ஆனி குயின், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.