நவராத்திரி விழாவையொட்டி நேற்று கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சிவலோகநாயகி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் கோவிலில் கெலு வைக்கப்பட்டது.
இதேபோன்று வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலு வைத்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.