தமிழக செய்திகள்

நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள்: மாணவர்களுக்கு அன்பில்மகேஷ் வாழ்த்து

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளார்கள். மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள். இத்தனை ஆண்டுகாலமாக எழுதிய தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் எனும் மனநிலையோடு தேர்வறைக்குள் நுழையுங்கள். வளமான எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அன்பு மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்