தமிழக செய்திகள்

ரெயில்வே அதிகாரிக்கான எழுத்து தேர்வு: திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் 28-ந் தேதி தொடங்குகிறது

ரெயில்வே அதிகாரி எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

இந்தியன் ரெயில்வே நடத்தும் 13,487 ஜூனியர் என்ஜினீயர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை சிறப்பாக எழுத உதவும் வகையில் பயிற்சி வகுப்புகளை திருச்செந்தூர் சிவந்தி அகாடமி நடத்த உள்ளது.

ஜூனியர் என்ஜினீயர் பணி முதல்நிலை எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம்(மார்ச்) 16-ந் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெறும். பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது. பயிற்சி கட்டணம் ரூ.4,000 ஆகும்.

பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதி மற்றும் உணவுக்கான கட்டணம் ரூ.3,400-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 28-ந் தேதி அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.4,000-க்கான டிமாண்ட் டிராப்ட்(கனரா வங்கி, ஐ.ஓ.பி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர் - 628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 21-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 04639-242998 மற்றும் 94420 55243, 86829 85148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு