தமிழக செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே சிவலோகநாதர் கோவிலில் நவசண்டி யாக பூஜை

காட்டுமன்னார்கோவில் அருகே சிவலோகநாதர் கோவிலில் நவசண்டி யாக பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஞானாம்பிகை உடனுறை சிவலோகநாதர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி நவசண்டி யாக பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து நவசண்டி யாகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சபேசன் சிவாச்சாரியார் தலைமையில்,

சிவாச்சாரியார்கள் நன்னிலம் ராமமூர்த்தி, கொல்லிமலை கீழ்பாதிகிராமத்தை சேர்ந்த நாகராஜன், சுரேஷ் மற்றும் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு பல்வேறு விசேஷ பூஜைகள் செய்து நவ சண்டி யாகத்தை நடத்தினர்.

பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்