கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

யாஸ் புயல்: நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

யாஸ் புயல் நாளை உருவாவதையடுத்து நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் புதுவை காரக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (24-05-2021_ கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மத்திய கிழக்கு வங்க கடலில் யாஸ் புயல் நாளை உருவாவதையடுத்து, நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இந்த மூன்று நாட்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்ததாக வருகின்ற 26ஆம் தேதி மன்னார் வளைகுடா தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு