தமிழக செய்திகள்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

மாவட்ட நிர்வாகங்கள் கனமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்.ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது .

பத்தனம்திட்டா , கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் , காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கனமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை