தமிழக செய்திகள்

ரூ.56 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் ரூ.56 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.

தினத்தந்தி

ராசிபுரம்

மஞ்சள் ஏலம்

ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சளை ஏலம் எடுத்தனர்.

ரூ.56 லட்சத்திற்கு விற்பனை

இதில் விரலி ரகம் 1,000 மூட்டைகளும், உருண்டை ரகம் 300 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 689-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 939-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 689-க்கும் அதிகபட்சமாக

ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 609-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 102-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 22-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 1,350 மஞ்சள் மூட்டைகள் ரூ.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு