மன்னார்குடி:-
மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி யோகா பயிற்சி நடைபெற்றது. யோகா பயிற்சியை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். யோகா பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரபாகரன், ஜென்னி, நேரு யுவகேந்திரா திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.இதேபோல் நீடாமங்கலம் அருகே அரிச்சபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். யோகா ஆசிரியர்கள் ராமன், கோபிநாத் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மதுராசுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. யோகா பயிற்றுனர் ஹரிகிருஷ்ணன், யோகா பயிற்சி அளித்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் யோகானந்தன், தொண்டு நிறுவன தலைவர் துரை ராயப்பன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.